யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு
Digital News Team 2022-10-15T12:12:30
-சி.எல்.சிசில்-
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதுடன் வரும்போது தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்
Be First to Comment