ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிதாரிகள் இருவர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.
யுக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில், பங்கு கொள்வதற்காக தமது விருப்பத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரச செய்தி ஸ்தாபனமான ரியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் முன்னாள் சோவியத் குடியரசு ஒன்றை சேர்ந்தவர்கள் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்த போதிலும் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிதாரிகள் இருவரும் பின்னர் யுக்ரைனுடனான எல்லை பிராந்தியத்தில் வைத்து ரஷ்ய இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Be First to Comment