கனடாவில் நடந்த விபத்தில் காரை ஓட்டியவர் பதீரன் என தகவல்.
ட்ரக் வாகனம் நேராக வந்து காரின் பக்கவாட்டில் மோதியதில் விபத்து.
கனடாவில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில் காரில் அவர்கள் எவ்வாறு பயணித்தனர் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவோவின் Markham நகரில் கடந்த புதன்கிழமை ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரன் புவேந்திரன் (21) என்பவரும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) என்பவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் (52) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியதாக உறவினர் துர்கா சர்வேஸ்வரன் கூறினார். கார் மற்றும் ட்ரக் மோதியதில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Acura காரில் தான் இலங்கை தமிழ் குடும்பம் பயணித்துள்ளது. காரை பதீரன் ஓட்டியிருக்கிறார். பதீரன் அருகில் உள்ள இருக்கையில் அவர் சகோதரி நெலுக்சனா அமர்ந்திருந்தார். காரின் பின்பகுதியில் அவர்களின் தாயார் ஸ்ரீரதி உட்கார்ந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
அப்போது ட்ரக் வாகனத்தின் முன்பகுதி காரின் பக்கவாட்டில் மிக வேகமாக மோதியிருக்கிறது. இதில் தான் காரில் இருந்த பதீரன் புவேந்திரன் மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
Be First to Comment