யாழ்.சங்கானை பகுதியில் உள்ள கடையொன்றில் மாவா பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் சாதா போதைவஸ்து விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவா போதைவஸ்தும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment