கோவிலில் குப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பை களவாடப்பட்ட சம்பவம் சண்டிலிப்பாய் – சீரணி அம்மன் கோவிலில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம் குறித்த பெண் ஆலயத்தை தரிசிக்க வந்த பெண் மோட்டார் சைக்கிளில் தனது கைப்பையினை வைத்துவிட்டு ஆலயத்தினை தரிசித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தவேளை கைப்பை களவாடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த கைப்பையில் கைத்தொலைபேசி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment