Press "Enter" to skip to content

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிறந்த வேலைத்திட்டங்கள் இருந்தன – கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிறந்த வேலைத்திட்டங்கள் இருந்தன எனினும் அதில் ஓரிரு குறைபாடுகள் இருக்கவே செய்தன. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஒன்றாக எழுவோம், களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில், கண்டி நாவலப்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலில் குழப்பமான நிலைமை ஒன்று ஏற்பட்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் நடைபெறும் மிகவும் வெற்றிகரமான அரசியல் கூட்டத்தில் பங்கேற்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலை நாம் சந்தித்தோம்.

2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம், அதனால் ஏற்பட்ட சமூக பிரச்சனைகளையடுத்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதா இல்லை எதிர்க் கட்சியில் இருப்பதா என்று சிந்திக்கும்போது புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன் காரணமாகவே 52 பேர் எதிர்க் கட்சி இருக்கையில் அமர்ந்தோம்.

அன்று அதற்கான தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கினார். அவர் வீட்டில் இருந்திருந்தால் மொட்டுக் கட்சி என்ற ஒன்று இருந்திருக்காது.

மொட்டுக் கட்சி பாரிய போராட்டங்களின் பின்னரே தேர்தலை சந்தித்தது.

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவை களமிறக்கினோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் சிறந்தவை. எனினும் அதில் ஓரிரு குறைபாடுகள் இருக்கவே செய்தன. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது பக்கத்தில் குறைபாடுகள் இருந்ததை ஏற்றுக்கொள்ளவில்லையாயின் எம்மால் மீண்டெழுந்து வர முடியாது.

ஏற்றுக்கொள்ளல் ஊடாகவே மீண்டும் எம்மால் எழுந்துவர முடியும்.

மிகச் சிறந்த வேலைத்திட்டமாக காபனிக் உர பயன்பாடு திட்டம் அமைந்திருந்தது. எனினும் அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் தவறாக அமைந்தன.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *