வயது மூப்பின் காரணமாக மறைந்த ( சுப்பையா பசுபதி )/தோழர் பண்டா அவர்களது புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை ஈழ மக்கள் ஜனனாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா செலுத்தினார்.
நீண்டகாலமாக வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் பணடா வவுனியாவில் நேற்றுமுந்தினம் காலமானார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்பையா பசுபதி தோழர் பண்டா அவர்களின் இறுதி நிகழ்வு இன்றையதினம் (16) வவுனியாவில நடைபெற்ற நிலையில் வவுனியாவுக்கு விஜயம்.மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கட்சிக்கொடி போர்த்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தார்.
அத்துடன் பண்டா தோழரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இதேவேளை தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், கட்சியின் முக்கியஸ்தர் தோழர் விந்தன், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின், கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் கட்சியின் தோழர் என பலர் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment