யாழ்.நகரில் உள்ள புடவை விற்பனை நிலையங்களில் வேலை செய்யும் 4 பேர் பெருமளவு போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து கொண்டு,
போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment