யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களிடம் இருந்து 296 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக நடவடிக்கைக்காக , இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் போதைப்பொருள் விற்பனை முகவர்கள் என தாம் சந்தேகிக்கப்பதாகவும் , மூவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Be First to Comment