நாட்டில் மீண்டும் மஹிந்தவின் காற்று வீசுவதற்கு ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த சுனாமியானது நாட்டை முற்றுமுழுதாக சீரழித்துவிட்டது.
இலட்சக்கணக்கில் உயிரிழந்தவர்கள் காரணமாக மஹிந்த பாரிய குற்றங்களுக்கு உள்ளாகினார்.
இதனை மக்கள் தெரிந்துகொண்டு இருந்தாலும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பலத்தை பெற்றுக்கொண்டனர்.
அதன் பிரதிபலனாக இன்று என்ன நடந்துள்ளது?
பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்தது. அதற்கு முந்தைய அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைத்து இருந்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முழுமையாக அதிகரிக்கப்பட்டது.
மக்களின் கண்களில் மணலை தூவினர். உண்மையை கூறினால் இன்று நாடு முழுமையாக சீரிழந்துவிட்டது.
மக்களை ஏமாற்றினர். மக்களை ஏமாற்றி பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தினால் நாடு வங்குரோத்து அடைந்தது மட்டுமே மிஞ்சியது.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடாக எமது நாடு கீழ்மட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது.
கடன்களை வாங்கி பாரியளவிலான மாநாட்டு மண்டபங்களை அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட மண்டபங்களிலிருந்து ஏதேனும் பயனை மக்கள் பெற்றுக்கொண்டனரா?
இவ்வாறான கடன்களால் நாடு வங்குரோத்து அடைந்தது மட்டுமே நடந்தது.
கோடிக்கணக்கில் அந்நியசெலாவணியை பெற்றவர்கள் ஒரு தொழிற்சாலையையேனும் அமைத்தனரா?
Be First to Comment