இலங்கையில் ஒரு தனிநபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,460 ரூபா அடிப்படை வாழ்க்கை செலவுக்கு தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜூலை மாதத்தில், ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளுக்கு 13,138 ரூபா தேவை என திணைக்களம் முன்னர் தீர்மானித்தது.
அதன்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதந்தம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 53,840 ரூபா தேவைப்படும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Be First to Comment