யாழ்.அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த 4 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே திறந்த நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுவதாகவும்,
கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் எழுது மட்டுவாழ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுக் கொள்வதாகவும்,
பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் குறித்த போதை பொருளை பெற்றுக் கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளார்கள்,
Be First to Comment