யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புடவை விற்பனை நிலையங்களில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த புடவை விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி யாழ்.மாநகர முதல்வருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதற்குப் பதிலளிக்கும்போதே முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் தனது பதில் கடிதத்தில் மிக விரைவில் குறித்த வர்த்தக நிலையங்களில் உரிமம் இரத்துச் செய்யபடும் எனவும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகவும் முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார்
Be First to Comment