வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நியமிக்ப்பட்டுள்ள குறித்த குழுவில், பிரதமர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போணோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி தொடர்பான பிணக்குகள் உட்பட வடக்கு கிழக்கு பகுதி மக்களினால் அடையாளப்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பரிகாரம் வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும். – 17.10.2022





Be First to Comment