Press "Enter" to skip to content

எரிபொருள் கப்பலுக்கு 43 லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை

இலங்கைக்கு வந்துள்ள மசகு எண்ணெய் கப்பலை இறக்குவதற்கு பணம் செலுத்தாமையால் தாமதக் கட்டணமாக 4.3 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இந்தக் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலரை தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும், அதில் 99,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மசகு எண்ணெய் கையிருப்பு தொடர்பான பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும், இந்த எரிபொருள் கையிருப்பை இறக்குவதற்கான திகதி குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *