யாழ் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிசாரினால் உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் மல்லாகம் சந்திப்பகுதியில் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளனர். பிரதான பொலிஸ் பரிசோதகர் மதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 23, 25 வயது உடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து 50 மில்லி கிராம் 60 மில்லி கிராம் 65 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாண நல்லூர் பகுதி சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களை நாளை யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆயராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இவர்கள் தெல்லிப்பளைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Be First to Comment