சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் அருகில் முதியவர் ஒருவரை கத்தியால் வெட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சங்கானை பகுதியில் பகலில் இந்த துணிகர கொள்ளை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment