Press "Enter" to skip to content

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த வீட்டு வளர்ப்பு நாய்!

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த வீட்டு வளர்ப்பு நாய் !!!

வீதியிலிருந்த தங்க நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை செல்லப்பிராணியான நாயொன்று மீட்டுக் கொடுத்த சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது.

கடந்த 16ம் திகதி, கண்டி குலகம்மான, மகாதென்ன பகுதியில் வீதியில் தவறவிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணப்பை என்பவற்றை எடுத்துச்சென்ற செல்லப்பிராணியான நாய் தனது வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த நகை மற்றும் பணத்தொகை என்பன உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *