Press "Enter" to skip to content

புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஜனநாயக போராளிகள் இந்திய அரசிடம் வலியுறுத்தல்

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டெல்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல்வேறுபட்ட கோரிக்கையினை   முன் வைத்திருந்தோம் அந்த கோரிக்கைகள் அவர்களால் செவி சாய்க்கப்பட்டதோடு அதற்கு தீர்வுகள் வழங்கப்படும் என நம்புகின்றோம்

கீழ்வரும் கோரிக்கைகள் எங்களால் முன்வைக்கப்பட்டது ,

மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம் தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் தொடர்ச்சியாக பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றன

குறிப்பாக கிழக்கு பகுதிகளில்   தமிழர்களின் காணிகளை அபகரித்து திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை நிறுத்த வேண்டும்

குறிப்பாக தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகள் அவர்களது தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான புலிகள் மீதான தடையினை நீக்கவேண்டும் என கோரிக்கையினை நாம் வைத்தோம் ,குறிப்பாக தெற்காசிய  பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா புலிகளின் மீதான தடையை  நீக்க  வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அத்தோடு தமிழர்களுக்கான ஒரு சமஸ்டி  அடிப்படையில் தீர்வுவழங்கப்படவேண்டும் 87 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் இந்தியா 13 ஐ நடைமுறை ப்படுத்தக் கோரி ஐநா சபையில் வலியுறுத்தியது போல இங்கே அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை  நாங்கள் விடுத்திருக்கின்றோம்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *