யாழ்ப்பாணம், கரவெட்டியை சேர்ந்த இளைஞன் ஒருவன் நேற்று (18) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞன் நேற்று முன்தினம் இரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேலை குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment