Press "Enter" to skip to content

முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று 19.10.22  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலீசாரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது தடையவியல் பொலீசார், மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் பொலீசார் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பகுப்பாய்வு நடத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

இதேவேளை இந்த மனித எச்சம் காணப்பட்டுள்ள வளவில் 2009 இறுதிப்போர் நேரத்தில் விடுதலைப்புலிகளின் மருத்துவமனை ஒன்று இயங்கியதாகவும் அந்த மருத்துவமனை மீது விமானதாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மனித எச்சம் காணப்பட்டுள்ள வளவில் மருத்துவமனை ஒன்றில் பஃயன்படுத்தக்கூடிய பல்வேறு மருத்துவ கழிவு  பொருட்கள் பல சிதறி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *