வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 21 வயதான இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி, பகுதியில் வீட்டில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டையடுத்து இளம்பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற பெண்ணே மரணமடைந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment