கொடிகாமத்தில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியின் நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடிய நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வு பொலிசாரின் புலன் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் கொடிக்காமம் சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுன் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபர்
நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். உப பொலிஸ் பரிசோதகர் ராஜரத்தினம் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment