Press "Enter" to skip to content

கோடிக்கணக்கான நிதி மோசடி : திலினி பிரியமாலிக்காக ஆஜராகும் நீதி அமைச்சரின் கனிஷ்ட சட்டத்தரணிகள்

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி தொடர்பில் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளில் அவருக்காக , நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாசவின் மகன் உள்ளிட்ட கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறியப்படும் குழுவினர் ஆஜராகின்றமை விஷேட அவதானத்தை ஈர்த்துள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (19) கோட்டை நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,  பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவும் இந்த விடயத்தை மன்றில் நாசூக்காக சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் குறித்த அவ்ழக்கின் போது,  சந்தேக நபரான திலினி பிரியமாலிக்காக, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் கனிஷ்ட சட்டத்தரணியாக அறியப்படும் சட்டத்தரணி தசுன் நாகஸ்ஹேன தலைமையில், நீதி அமைச்சர் விஜேதாசவின் மகன்  ரகித்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகளான இந்திக பிரேமதிலக, மாதவ ஜயவர்தன, சவும்ய உள்ளிட்ட குழுவினர் ஆஜராகி பிணை விண்ணப்பம் செய்திருந்தனர்.

அத்துடன்  திலினி பிரியமாலி எந்த மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனவும், சி.ஐ.டி.யினர் தவறான தகவல்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *