பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
உயர்கல்வி அமைச்சை நான் பொறுப்பேற்று மூன்றரை மாதங்களே ஆகின்றன. ஆனால் இந்த காலப்பகுதிக்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளேன்.
அந்தவகையில் ஒவ்வொரு பீடங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நாம் அடையாளம் கண்டிருக்கின்றோம். எனவே அதற்கமைய கூடிய விரைவில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்வுள்ளேன்.
அந்தவகையில் நீங்கள் கூறியதை போன்று 42 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருக்கின்றமை குறைவடையும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அமைய உதவி விரிவுiயாளர்களாக இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கே அந்த நியமனங்களை வழங்க கூடியதாகவிருக்கும்.
கடந்த வருடத்திற்கு முன்னர் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமைக்கு அமைய விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
அதேபோன்று வளங்களும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளை ஈடுசெய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து கூடிய விரைவில நடவடிக்கை எடுக்கப்படும்.
Be First to Comment