மூளாயில் வீடு புகுந்து திருட்டு – சந்தேகநபர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீடு புகுந்து இலத்திரனியல் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (19) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரை திருடப்பட்ட இலத்திரனியல் சாதனங்களுடன் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள், மட்டக்களப்பில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோத குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை வீட்டாருக்கு தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment