தொடங்கொட விகாரை ஒன்றில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தின் போது தீப்பந்தங்களை சுழற்றிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
தொடம்கொட ஹர்மன்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் மிரிஸ்வத்தை தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான கிஹான் கவிந்து விக்ரமரத்ன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடின பிங்கம பெரஹராவில் உயிரிழந்த குறித்த மாணவன் மற்றும் சிலர் தீப்பந்தங்களை சுழற்றிக்கொண்டிருந்த போது, கோவிலில் இருந்து நாணல் புதர் வரை தற்காலிகமாக நீட்டப்பட்டிருந்த மின்சார வயர் தீப்பந்தங்களை சுழற்றிய இரும்பு வளையத்தில் முட்டியதில் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். அதை எடுக்க முன்வந்தபோது மற்றவருக்கும் காயம் ஏற்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டியின் சுகாதாரப் பணியாளர்கள் மின்சாரம் தாக்கிய மாணவனுக்கு செயற்கை சுவாசம் வழங்கி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment