முன்பெல்லாம் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் சத்தம் எங்கும் கேட்கும். ஆனால் இப்போதெல்லாம் அது போன்ற ஒலிகள் அரிதாகவே கேட்கின்றன. பட்டாசுகளின் விலை உயர்வுதான் இதற்குக் காரணம்.
தீபாவளி பருவ காலத்தில் பட்டாசுப் பொருட்கள் வழக்கம் போல் விற்பனை செய்யப்படவில்லை என ஹட்டன் வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெடிபொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விலைவாசி உயர்வால் தங்களது தொழில்கள் முடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு 80 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு சிறிய பட்டாசு பக்கெட் இந்தப் பண்டிகைக் காலத்தில் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுகிறது.
அதே சமயம் பட்டாசுப் பொருட்களின் விலையும் முந்நூறு சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக வரி மற்றும் பட்டாசு உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக அந்தப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment