இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்ஸ்அப் சேவை முடங்கியது.
இதனால் இலங்கை மற்றும்இந்தியாவில் உள்ள வட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.
சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வட்ஸ்அப் சேவை முடங்கி உள்ளது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் வட்ஸ்அப் நிறுவனம் சார்ப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
Be First to Comment