மோட்டார் சைக்கிள் சொகுசு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பவதி பெண் ஒருவரும் அவருடைய கணவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ள கர்பிணி பெண் மேலதி சிகிச்சைக்காக கிளிநொச்;சி மாவட்ட மருத்துவுமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியினை சேர்ந்த 21 அகவை குடும்பஸ்தர் தனது மனைவியான கர்பவதியை ஏற்றி சென்றபோது விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த குடும்பஸ் மற்றும் கர்பிணி பெண் ஆகியோர் அருகில் இருந்த மக்களால் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் கர்ப்பவதி பெண்ணின் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் வாகன சாரதியினை கைதுசெய்துள்ளதுடன்
வாகனத்தினையும் பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
Be First to Comment