நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மதுபாவனை, போதைப் பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், ஐவர் கைதுசெய்யப்பட்டள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மட்டும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 66 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 310 லீற்றர் கோடா, இரண்டு இரும்பு பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் 8 கிராம் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 12,900 ரூபாய் பணத்தையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை புத்தள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா சேனை ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் 4,000 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment