வீழ்ச்சிப் பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்று இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அமைச்சினூடாக எதிர்வரும் ஓரிரு மாதங்களில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக வெளிநாட்டு இலங்கையர் அலுவலகத்தை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று மோசடிகளுக்கு எதிரான மூன்று சட்டமூலங்களை கொண்டுவருவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
தேர்தல்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டுமக்கள் வாழ முடியாத சூழலில் இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
நாடு எதிர்கொண்டு இருக்கும் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்காவிடின் இன்னும் ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
அரசாங்கமானது இவ்விடயங்களில் தற்போது அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது.
Be First to Comment