தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முன்பிள்ளைப் பருவ டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்பிள்ளைப்பருவ விருத்தி குறித்து கற்பதற்கு ஆர்வமுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்த, எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதியன்று 45 வயதுக்கு மேற்படாத சிறந்த நன்னடத்தையும் நல்ல தேக ஆரோக்கியமும் கொண்டவர்கள் மேற்படி கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
குறித்த கற்கை நெறியானது ஒரு வருட காலத்தைக் கொண்டமைவதுடன் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் சுய விபரங்களை உள்ளடக்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்பாக பணிப்பாளர் நாயகம், தேசிய கல்வி நிறுவகம், மஹரகம எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
Be First to Comment