தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இருபத்தி இரண்டாவது சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், நீதிமன்றம் அவ்வப்போது தனது சட்ட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் பிரேரணையின்றி, நீதித்துறையையோ அல்லது நீதிபதிகளையோ நாடாளுமன்றத்தில் விமர்சிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே எம்.ஏ. சுமந்திரனின் கருத்து நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் பலத்த முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் எம்.பியின் கருத்து முரண்பாட்டை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது: விஜேதாச
More from UncategorizedMore posts in Uncategorized »
- மிக்ஜம் சூறாவளி கரையை கடந்தது!
- அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
- 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது – வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு தெரிவிப்பு
- டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது
- 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Be First to Comment