Press "Enter" to skip to content

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு 22 வருட கடூழிய சிறை!

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, இந்த தண்டனையைஅ கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இன்று தீர்ப்பளித்தார்.

டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு 22 வருட கடூழிய சிறை! | 22 Years Of Brutal Attacked Douglas

குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

24 வருடங்களின் பின் வழங்கப்பட்ட  தீர்ப்பு

1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் எம்.பி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு 22 வருட கடூழிய சிறை! | 22 Years Of Brutal Attacked Douglas

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *