நாட்டில் பக்கவாத நோய் காரணமாக வருடாந்தம் 60 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகமானோரின் மரணத்துக்கு அவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமையே காரணம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். மேலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோருக்கு வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், தற்போது அந்த நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது. பக்கவாதத்துக்கு பிரதான காரணம் உயர் இரத்த அழுத்தமாகும். எனவே, குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு தடவையாவது அருகிலுள்ள மருத்துவமனைகளில் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்வது அவசியமாகும். நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 4 ஆயிரம் பேர் துரித சிகிச்சைகளை பெறாமல் உயிரிழக்கின்றனர் என மருத்துவ நிபுணர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடாந்தம் 4,000 பேர் பக்கவாதத்தால் உயிரிழப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்!
- சித்தன்கேணி இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
- மின்சாரம் தாக்கி இளைஞர் பலி! யாழில் பரிதாபம்
- உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
- கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!
Be First to Comment