Press "Enter" to skip to content

துறைமுகத்தில் தேங்கியுள்ள புற்றுநோயாளர்களுக்கான மருந்துகள்!

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரால் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு, புற்றுநோயாளர்களுக்காக அனுப்பப்பட்ட ஒருதொகை மருந்து பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவினால் அதற்கான உரிய ஆவணங்களை முன்வைக்காமையே இதற்கு பிரதான காரணமாகும்.

இவ்வாறு தேங்கியுள்ள மருந்து பொருட்களில் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான, புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 20 அத்தியாவசிய மருந்துகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் சிலரால், குறித்த மருந்துப்பொருட்கள் இந்தியாவில் உள்ள தனியார் ஒளடத உற்பத்தி நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மருந்து தட்டுப்பாடு காரணமாக, நோயாளர்களின் நன்மை கருதி வைத்தியர்கள் சிலரது கோரிக்கைக்கு அமைய குறித்த மருந்துப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *