யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரண்டு சொகுசுப் பேருந்துகள் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தபோது, நொச்சிமோட்டைப் பாலத்தில் முதல் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து கவிழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பின்னால் வந்த பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், விதியிலிருந்து வனப்பகுதிக்குச் சென்று விபத்தை தவிர்க்க முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னால் சென்ற பேருந்தின் சாரதி தூங்கியிருக்கலாம் அல்லது அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து காரணமாக கவிழ்ந்த பேருந்தின் சாரதி உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 17 பயணிகளில் 08 ஆண்களும் 09 பெண்களும் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்
Be First to Comment