Press "Enter" to skip to content

இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட சோதனையில் 100கிலோ கஞ்சா மீட்பு!

வடக்கில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா போதைப் பொருள் தொகை ஒன்று மீட்கப்பட்டது.

இன்று வரை அதிகளவான போதைப்பொருட்கள் எமது நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதன் காரணத்தினால் இளைய தலைமுறையினர் அதிகமாக இப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் யாழ்ப்பாண பாதுகாப்புப் படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர சிரேஸ்ட அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கும் வழிகாட்டுதலுக்கும் அமைவாகவும் 51வது மற்றும் 52வது காலாட் படைகளின் தளபதிகளின் மேற்பார்வையுடனும் 512வது காலாட் படைப்பிரிவின் உளவுத்துறை வீரர்கள் மற்றும் 11வது பொறியியலாளர் படைப்பிரிவின் வீரர்கள் மூலமாக இன்று ஜே 190 அரியாலை கிழக்கு பிரதேசத்தில் 03:55 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா 100 கிலோ கிராம் (42 பக்கட்கள்) மீட்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் விஷேட படைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *