Press "Enter" to skip to content

பொலன்னறுவை சிறுமி தொடர்பில் அபாண்டமான கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளருக்கு எதிராக விசாரணை – பிரதமர் தினேஷ்

நாட்டில் எவருக்கும் எந்தவித அவமதிப்பு இடம் பெறுவதற்கோ அல்லது எதையும் மறைப்பதற்கோ இடமளிக்க முடியாது அவ்வாறான கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது.

அதன் பிரகாரம் பொலனறுவை சிறுமி தொடர்பில் அபாண்டமான கருத்து தெரிவித்த  மாவட்ட செயலாளருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என பிரதமர் தினேஷ் குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) ரோஹினி கவிரத்ன எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தமது கேள்வியின் போது, பொலனறுவை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் உணவு இல்லாத பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் 13 வயதான அந்த சிறுமியை அவமானப்படுத்தும் வகையில் பொலனறுவை மாவட்ட செயலாளர் அந்த சிறுமி கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி, வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரப் படுத்தப்பட்டு அந்த மாணவி பெரும் அவமானத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன் அவரது நன்னடத்தைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என அவர் கேள்வியெழுப்பினார்.

அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், பொலனறுவை மாவட்டச் செயலாளர் செயற்பட்ட விதம் தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அந்த விளக்கம் கிடைத்ததும் அவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு சிறுமிகள் மட்டுமின்றி நாட்டில் எவருக்கும் இத்தகைய அவமதிப்புகள் இடம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது.

நாட்டில் எவருக்கும் எந்தவித அவமதிப்பு இடம் பெறுவதற்கோ அல்லது எதையும் மறைப்பதற்கோ இடமளிக்க முடியாது அவ்வாறான கொள்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *