விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் விடுதலை புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த அகழ்வு பணியில் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
Be First to Comment