தீவகத்தில் நீண்ட காலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 60 பவுண் நகையும் மீட்கப்பட்டடுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பகல் நேரங்களில் வீடு உடைத்து திருடிய சந்மவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வேலணை அராலி புங்குடுதீவு காரைநகர் பகுதியில் கடந்த காலங்களில் பகல் வேளையில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த
கொட்டடி பகுதியைச் சேர்ந்த20-22 வயதுடைய இருவரும்திருடிய நகைகளை கொள்வனவு செய்த மேலும் இருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்கள் இருவருக்கும 16 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 60 பவுண் நகையும் ஒருதொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது
அராலி வீதீ வேணையில் 20 பவுண்
வங்களாவடி7 1/2 பவுண்
சுருவில்13 பவுண்
புங்குடுதீவு 3 பவுண்
முழங்காவில்11 பவுண் நகைகளும்
காரைநகரில் வீடு உடைத்து திருடியமை உள்ளிட்டகுற்றச்சாட்டுக்களை ஒப்பு கொண்டுள்ளதோடு
சந்தேக நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும்
திருடப்படும் நகைகளை விற்று அந்த பணத்தினை கொண்டு போதை பொருளை கொள்வனவு செய்வதாகவும்
வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடுகளில் இறங்கி நீண்டகாலமாக சுதந்திரமாக திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்,
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Be First to Comment