ஜனாதிபதி அலுவலகத்தில், செலவு குறைப்பு அடிப்படையில் பால் தேநீருக்கு பதில் சாதாரண தேநீர்(plan tea) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், தகவல் தந்த அவர், ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் சாதாரண தேநீரை மட்டுமே, செயலகத்துக்கு வருபவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
கூட்டங்களில் பங்கேற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை மகிழ்விப்பதற்காக செலவழித்த பணத்தை குறைக்க வேண்டிய பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment