சுன்னாகம் மாசியப்பட்டி பிரதான வீதியில் ரெலிகொம் கேபிள் ரீவி இணைப்பு வயர்கள் விசமிகளால் வெட்டி நாசம்,
நேற்று முன்தினம் இரவு மாசியம்பிட்டி -சுன்னாகம் பிரதான வீதியில் ரெலிகொம் நிறுவன இணைப்பு வயர்கள் மற்றும் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்கள் விசமிகளால் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது
சுமார் 200 மீற்றர் நீளமான இணைப்பு வயர்கள் வெட்டி சேதப்படுத்த பட்டமையினால் அப்பகுதியில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகள் மற்றும் ரெலிகொம் இணைய வசதிகள் செயலிழந்த நிலையில்,
ரெலிகொம் மற்றும் தொலைக்காட்சி கேபிள் வழங்குனர்கள் வெட்டப்பட்ட வயர்களை இணைத்தமையால் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பின
குறித்த விடயம் தொடர்பில் ரெலிகொம் நிறுவனத்தினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,
Be First to Comment