வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய தங்க நகைகளை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியவர்களை பொலிஸார், இராணுவத்தினரும், பொதுமக்களும் இணைந்து துரத்திப் பிடித்துள்ளனர்.
பத்தரமுல்ல சந்தியில் நேற்று (1) காலை யுவதி ஒருவரின் தங்க நகையை அறுத்துக்கொண்டு இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
அவர்களை பொதுமக்கள் மடக்கிய நிலையில் சந்தேகநபர் ஒருவர் சுற்றியிருந்தவர்களை பயமுறுத்தி தப்பிச் சென்றுள்ளார். மற்றயவர் சிக்கியுள்ளார்.
பின்னர் பொலிசார், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேக நபரை சுமார் 500 மீற்றர் தூரம் துரத்திச் சென்று பொல்துவ பாலத்திற்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் நேற்று காலை தலங்கம பகுதியில் பல இடங்களில் ஆயுதங்களைக் காட்டி பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment