Press "Enter" to skip to content

திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வத்தளை – அவரிவத்தை எட்வர்ட் பதுமவிலில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக திலினி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தநிலையில், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திலினி பிரியமாலி, டுபாயில் ஆரம்பித்துள்ள வியாபாரம் ஒன்று தொடர்பில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வியாபார நடவடிக்கை திலினி பிரியமாலி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *