எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகெண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
மசகெண்ணெய் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment