Press "Enter" to skip to content

மகளை தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை

மகளை கடுமையாக தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

சம்பவம்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த தனது 19 வயது மகளை 40 வயதுடைய தந்தை இச் செயலை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது

இது தொடர்பில் தந்தை நேற்று (11) கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மகளை தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தை | The Father Assaulted And Raped His Daughter

பாதிக்கப்பட்ட மாணவி தனது தாய் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் சுகவீனமுற்றிருந்த சகோதரர்கள் இருவருக்கும் வைத்திய சிகிச்சைக்காக தாய் வீட்டை விட்டு வெளியேறிய போது வீட்டில் இருந்த தந்தை இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் தலைக்கு எண்ணெய் தடவுமாறும் தந்தை தனது அவரது அறைக்கு அழைத்து முகத்தில் முத்தமிட்டதாகவும், இதனை விரும்பாத தான் தப்பிக்க முயற்சித்தபோது தன்மீது தாக்குதல் நடத்தி துஷ்பிரயோகம் செய்தார் எனவும் குறித்த மாணவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *