Press "Enter" to skip to content

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணமாக 1465 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், ஏற்கனவே 795 வகையான பொருட்கள் கட்டுப்பாடுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளில் உள்ள 670 வகையான பொருட்களில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதைத் தொடர்வதா அல்லது நிரந்தரமாக கட்டுப்படுத்துவதா, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *