Press "Enter" to skip to content

சீன மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட உணவுப் பொதிகள் மக்களுக்கு வழங்கி வைப்பு!

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துளசேன, சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் கே.பாலகிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *